Sunday, March 6, 2011

நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள்


நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில்
நாதசுரம் இசைக்கும் பண்கள்.


காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்)
 
* காலை 4.00 - 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி, நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை.
* காலை 6.00 - 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோகினி, சுத்த தனயாசி.
* காலை 8.00 - 10.00 தன்யாசி, அசாவேரி, சாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோகரி.
* காலை 10.00 - 12.00 சுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன சாரங்கா, தர்பார்.
* பகல் 12.00 - 2.00 சுத்த பங்காளா, பூர்ண சந்திரிகா, கோகில திலகம், முகாரி, கெளடமல்லார்.
* பகல் 2.00 - 4.00 நாட்டைக்குறிஞ்சி, உசேனி, ரவிச்சந்திரிகா, வர்த்தனி, அம்சாநந்தி, மந்தாரி.
* மாலை 4.00 - 6.00 பூர்வி கல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரசுவதி, சீலாங்கி, கல்யாணி.
* மாலை 6.00 - 8.00 சங்கராபரணம், பைரவி, கரகரப்பிரியா, பைரவம், நாராயணி, அம்சதுவனி. கெளளை.
* இரவு 8.00 - 10.00 காம்போதி, சண்முகப்பிரியா, தோடி, நடபைரவி, அரிகாம்போதி, கமாசு, ரஞ்சனி.
* இரவு 10.00 - 12.00 சிம்மேந்திர மத்யமம், சாருகேசி, கீரவாணி, ரீதி கெளளை, ஆனந்தபைரவி, நீலாம்பரி,
. . . . . . . . . . . . . . . . யதுகலகாம்போதி.
* இரவு 12.00 - 2.00 அடாணா, கேதார கெளளை, பியாகடை, சாமா, வராளி, தர்மவதி.
* இரவு 2.00 - 4.00 ஏமாவதி, இந்தோளம், கர்நாடக தேவகாந்தாரி, தசாவளி, பாகேசுவரி, மோகனம்.



விழாக்கால வீதிஉலாக்களில் கோயில்
உள்ளும் வெளியிலும் இசைக்கவேண்டிய முறைகள்

* மண்டகப்படி தீபாராதனை.
1. தளிகை எடுத்துவர - மிஸ்ர மல்லாரி
2. தீபாரதனை நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* புறப்பாடு
1. புறப்பாடு முன் - நாட்டை
2. புறப்பாடு ஆனதும் - யாகசாலைவரை - திருபுடைதாள மன்னியில் மற்ற தாளங்களில் மல்லரிகள்.
* யாகசாலை தீபாராதனை நேரம் - ஒத்து, நாதசுரம், மிருதங்கம் மாத்திரம்.
* யாகசாலை முதல் கோபுரவாசல் வரை - திருபுடைதாள மல்லரி.
* கோபுரவாசல் முதல் தேரடிவரை - இதர மல்லரிகளும் வர்ணமும்.
* தேரடியிலிருந்து தெற்குரதவீதி பாதி வரை - ராகம்.
* தெற்குரதவீதி பாதி முதல் மேலரதவீதி பாதி வரை - ராகம், பல்லவி.
* மேலைரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை - கிர்த்தனைகள்.
* ஈசான்ய மூலை முதல் தேரடி வரை - தேவாரம், திருப்புகழ்.
* தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை - நட்டுமுட்டு, சின்னமேளம் ( அல்லது முகவீணை )
* கோயிலுக்குள் - துரிதகால திரிபுடைதாள மல்லரிகள்.
* தட்டு சுற்று நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* எதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது - எச்சரிக்கை.

விழாக்காலங்களில் கொடிஏற்றத்தினன்றும் கொடி இறக்கத்தினன்றும்
நவசந்திகளில் இசைக்க வேண்டிய பண் முறைகள்


* பிரம சந்தி - மத்தி - பைரவி.
* இந்தர சந்தி - கிழக்கு - குர்ஜரீ.
* அக்கினி சந்தி - தென்கிழக்கு - நாட்டை.
* இயம சந்தி - தெற்கு - தசாட்சரீ.
* நிருதி சந்தி - தென்மேற்கு - குண்டக்கிரிய.
* வருண சந்தி - மேற்கு - வராளி.
* வாயு சந்தி - வடமேற்கு - வேளாவளி.
* குபேர சந்தி - வடக்கு - ராமகலீ.
* ஈசான சந்தி - வட கிழக்கு - பிலகரி.



வைணவக்கோயில்களில் தேவாரம் திருப்புகழ் இவைகளுக்கு பதிலாக
அஷ்டபதி, திருப்பாவை முதலியன இசைக்கலாம்.


மேற்கண்ட விவரங்கள் யாவுய் அருள்மிகு சுவாமிநாதசுவாமி தேவஸ்தானம் - சுவாமிமலை தமிழ்நாடு
7.10.58 ல் வெளியிட்ட சிறு கைஏட்டு இதழில் கண்டது.
முன்னுரை குறிப்புகள்

1. மேற்படி தேவஸ்தானத்தினால் நாதசுர கலைப்பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டு நடைபெற்றது.
2. பள்ளியில் கற்பிக்கப்படும் கலைநுணுக்க விவரங்கள் மாணாக்கர் மட்டுமின்றி பயிற்சியாளர் போல் நாதசுர இசை சுவைஞரும், திருக்கோயில் தக்கார்களும் அறிந்து கொள்ள அல்லது சீர்மையடையச் செய்ய உதவுவதற்காக இக்சிறு கையேடு வெளியிடப்படுகிறது.
3. வெளியிட பணித்தவர் அந்நாள் தஞ்சை அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு. சக்கரை அவர்கள்.
4. இவை யாவும் கடை பிடிக்க வேண்டியவை என காட்டப்பட்வையே. அன்றியும் தனிக்கோயில்கள் தத்தம் நெடுநாளைய பழக்க வழக்கத்தில் நடைபெறுவனவற்றிற்கு சீர்மை பெற உதவுவதற்கும்.
5. விவரங்களை அளித்துதவியோர் திரு வீருசாமிப்பிள்ளை மற்றும் நாதசுரப்பள்ளி ஆசிரியர் திருப்பாம்புரம் திரு. சோமசுந்தரம் பிள்ளை.
6. அந்நாளைய திருக்கோயில் தக்கார் - இராமாஅமிர்த உடையார் ///// நிர்வாக அதிகாரி - வைத்திய நாதன்.

Courtesy: http://www.tamilheritage.org



 

No comments:

Post a Comment