Monday, March 7, 2011

நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை



நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை (1910-1964)

பிறப்பு

தஞ்சைமாவட்டத்தை சேர்ந்த கும்பகோணம் அருகில் உள்ள கிராமம்நாச்சியார்கோவிலில் பாரம்பரிய இசைவேளாளர் குடும்பத்தை சார்ந்த நடனஆசிரியர் பக்கிரியாபிள்ளை,கண்ணம்பாள் இவர்களுக்கு மகனாக 08-11-1910-ல்பிறந்தவர் நாச்சியார்கோயில் என்.பி.. இராகவப்பிள்ளை. நடனஆசிரியர்இராமச்சந்திரம்பிள்ளை,இசைகலைஞர் ரெங்கசாமிபிள்ளை,நடராஜபிள்ளை இவரது சகோதரர்கள்.திருமதி காமுஅம்மாள,திருமதிஅம்மணிஅம்மாள்,திருமதி வஞ்சுவள்ளி இவரது சகோதரிகள்.
பெயர் காரணம்

இராகவப்பிள்ளை குழந்தையாக இருக்கும்போது அவரது தொட்டிலை சுற்றி ஒரு
நல்லபாம்பு இருப்பதை பார்த்த அவரது தாயார் அலறிக்கூச்சலிட தெருவில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து அருகில் செல்ல அஞ்சி பெருமாள்திருநாமங்களை ச் சொல்லி வேண்டி நின்றனர். பாம்பு மேல் கூரைவழியாவெளியேறியது. இதனால் இவருக்கு இராகவன் என்று பெயர் சூட்டினர்.

குடும்பம்

தன் மகனுக்கு இயற்கையிலேயே நல்ல ஞானம் இருப்பதை அறிந்து அவருக்குமிருதங்கம் பயில ஏற்பாடு செய்தார் ஆனால் இவருக்கோ தவில் தான் அதிகவிருப்பம், எனவே இவரை திருவாளப்புத்தூர் பசுபதியாபிள்ளையிடம் இரண்டுஆண்டுகளும்,பின்பு நீடாமங்களம் என்.டி.மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம்குருகுலமாக பதினொரு ஆண்டுகள் தவில் பயின்றார் இவரதுதிறமையும்,பண்பையும் கண்ட மீனாட்சிசுந்தரம்பிள்ளை தன் மகள்ஜெயலட்சுமியை 07-05-1935ல் திருமணம் செய்து வைத்தார். இவருக்குகமலா,கோமதி,வேம்பு,பிரேமா,சித்திரா என்ற ஐந்து பெண்களும், வாசுதேவன்என்ற ஓரே மகனும் இருக்கிறார்கள்.



இவருடன் வாசித்த நாதசுரகலைஞர்கள்
16-01-1943-
 
* கீரனூர் சகோதரர்கள்
* செம்பனார்கோவில் கோவிந்தசாமிபிள்ளை,சகோதரர்கள்
* திருவீழிமிழழை சகோதரர்கள்,
* திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளை,
* திருவெண்காடு சுப்பரமணியபிள்ளை,
* பெரம்பலூர் அங்கப்பாப்பிள்ளை,
* அய்யம்பேட்டை வேணுகோபால்பிள்ளை,
* இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு சகோதரர்கள்,
* திருவாடுதுறை கக்காயி என்கிற நடராஜசுந்தரம் பிள்ளை,
* குளிக்கரை பிச்சப்பாபிள்ளை,
* குளிக்கரை காளிதாஸ்பிள்ளை
* திருச்சேறை சிவசுப்பிரமணியப்பிள்ளை,
* திருமெய்ஞானம் நடராஜசுந்தரம்பிள்ளை,
* நாச்சியார்கோயில் என்.கே.ராஜம்,என்.கே.துரைக்கண்ணுப்பிள்ளை,
* திருவாரூர் ராஜரத்தினம்பிள்ளை,
* திருவிடைமருதூர் பி.எஸ். வீராசாமிபிள்ளை,
* வேதாரண்யம் வேதமூர்த்திபிள்ளை,
* நாக்கிரிப்பேட்டை கிருஷ்ணன்,
* காருக்குறிச்சி பி.அருணாசலம்.

இவரிடம் பயின்ற மாணவர்கள்

* வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை
* யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்திபிள்ளை,
* பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை
* திருவிழந்தூர் வேணுகோபாலப்பிள்ளை,
* இலுப்பூர் ஆர்.சி.நல்லகுமார்,]]
* அன்னாவரவு பஸ்வய்யா,
* வெல்டூரி நாராயணி,
* புஸலூரி குருவய்யா,
* தஞ்சாவூர் டி.ஆர்.கோவிந்தராஜன்

இவர் பெற்ற பட்டங்கள்

இலங்கை வல்வெட்டித் துறையில் அகில இந்திய தவில்சக்கரவர்த்தில் பாலநந்தீஸ்வர பூஷண, 04-04-1949-ல் நாதலாயபிரம்மதவில் அரசு


இவரை பற்றி மற்றவர்கள்

1. திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளை, இவரது தேதி கிடைக்கவில்லை என்றால்
தன் நிகழ்சியை ஒத்திவைப்பார்
2. திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா அவர்களிக்கு வரவேற்பு தந்த்து
அதில் திருமெய்ஞானம் நடராஜசுந்தரம்பிள்ளை, நாதசுரம் இராகவப்பிள்ளை தவில் வாசித்தார் மேடை ஏறிய அண்ணா மிக அருமையான நாதசுரதவில் நிகழ்சியை ஊர்வலத்தில் வைத்துவிட்டிர்கள், நான் கேட்டுரசிப்பதற்க்கு வாய்பில்லாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்
3. நடிகர்திலகம் சிவாஜிகணோசன்்திருமணத்தில் காரக்குறிச்சி பி.அருணாசலம். நாதசுரம் நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளை,நீடாமங்கலம் சண்முகவடிவேல், கும்பகோணம் தங்கவேல்பிள்ளை, யாழ்பாணம் தெட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை இவர்கள் வாசித்தார்கள் தனி ஆவர்தனம்
2 மணி நேரம் வாசிக்கப்பட்டது ரசிகர்கள் இராகவப்பிள்ளை மீண்டும் வாசிக்கச்சொல் ஓன்ஸமோர் ஓன்ஸமோர் என்றனர் பிள்ளை 3/4 மணிநேரம் வாசித்தார் சிவாஜிகணோசன் ரூபாய் நோட்டுகளை கூடையில் எடுத்து வந்து இராகவப்பிள்ளை க்கு கனகாபிஷேகம் செய்தார்.
4. இவரது தவில் வாசிப்பு பற்றி சுதேசமித்திரன் நாளிதழில் இவர் நாதசுரத்திற்க்கு
லாகவமாக வாசிப்பதால் இவர் தன் பெயரை ஸ்ரீஇலாகவப்பிள்ளை என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று எழுதியது.
5. மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.மூப்பனார் வாரப்பத்திரிக்கை ஓன்றில் நான்சிறுபிள்ளையாக இருக்கும் போது என் தந்தையார் எங்கள் ஊர் கோவிலில் சாமி
புறப்பாடு நடத்துவார்கள் , அதற்க்கு திருவீழிமிழழசுப்பரமணியபிள்ளை, அவரும் நடராஜசுந்தரம்பிள்ளை, யும் நாதசுரம் வாசிக்க நீடாமங்களம்என்.டி.மீனாட்சிசுந்தரம்பிள்ளை,நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளை யும் தவில் வாசிப்பார்கள் நான் இவர்கள் வாசிப்பதைக்கேட்டுக்கொண்டு எல்லா வீதிகளிலும் நடந்தே வருவேன், அது முதல் எனக்கு கர்நாடக சங்ககீதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. என்றார்

மறைவு

ரத்த அழுத்த நோயால் 10-04-1964 ல் இறைநிழலில் கலந்தார்.

நூற்றாண்டு விழா

இராகவப்பிள்ளையின் நூற்றாண்டு விழா நவம்பர் 11, 2011 அன்று கும்பகோணத்தில் உள்ள எஸ். ஈ. டி. மஹாலில் காலை 06.30 மணிக்குத் தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெற்றது. முன்னணி தவில் மற்றும் நாதசுவர கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் மாண்டலின் யு. ஸ்ரீனிவாசன், நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் கச்சேரிகளும் நடைபெற்றன. தமிழக அமைச்சர் கோ.சி.மணி நூற்றாண்டு விழா மலரை வெளியிட ஜி.ஆர்.மூப்பனார் பெற்றுக்கொன்டார். நிகழ்ச்சிகளை நூற்றாண்டுவிழாச் செயலாளர் ஆர். இளங்கோவன் நடத்தினார்.


Courtesy:http://mohan-gandhimohan.blogspot.com/2011/01/blog-post_22.html?zx=cda61045084b0430

Sunday, March 6, 2011

நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள்


நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில்
நாதசுரம் இசைக்கும் பண்கள்.


காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்)
 
* காலை 4.00 - 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி, நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை.
* காலை 6.00 - 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோகினி, சுத்த தனயாசி.
* காலை 8.00 - 10.00 தன்யாசி, அசாவேரி, சாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோகரி.
* காலை 10.00 - 12.00 சுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன சாரங்கா, தர்பார்.
* பகல் 12.00 - 2.00 சுத்த பங்காளா, பூர்ண சந்திரிகா, கோகில திலகம், முகாரி, கெளடமல்லார்.
* பகல் 2.00 - 4.00 நாட்டைக்குறிஞ்சி, உசேனி, ரவிச்சந்திரிகா, வர்த்தனி, அம்சாநந்தி, மந்தாரி.
* மாலை 4.00 - 6.00 பூர்வி கல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரசுவதி, சீலாங்கி, கல்யாணி.
* மாலை 6.00 - 8.00 சங்கராபரணம், பைரவி, கரகரப்பிரியா, பைரவம், நாராயணி, அம்சதுவனி. கெளளை.
* இரவு 8.00 - 10.00 காம்போதி, சண்முகப்பிரியா, தோடி, நடபைரவி, அரிகாம்போதி, கமாசு, ரஞ்சனி.
* இரவு 10.00 - 12.00 சிம்மேந்திர மத்யமம், சாருகேசி, கீரவாணி, ரீதி கெளளை, ஆனந்தபைரவி, நீலாம்பரி,
. . . . . . . . . . . . . . . . யதுகலகாம்போதி.
* இரவு 12.00 - 2.00 அடாணா, கேதார கெளளை, பியாகடை, சாமா, வராளி, தர்மவதி.
* இரவு 2.00 - 4.00 ஏமாவதி, இந்தோளம், கர்நாடக தேவகாந்தாரி, தசாவளி, பாகேசுவரி, மோகனம்.



விழாக்கால வீதிஉலாக்களில் கோயில்
உள்ளும் வெளியிலும் இசைக்கவேண்டிய முறைகள்

* மண்டகப்படி தீபாராதனை.
1. தளிகை எடுத்துவர - மிஸ்ர மல்லாரி
2. தீபாரதனை நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* புறப்பாடு
1. புறப்பாடு முன் - நாட்டை
2. புறப்பாடு ஆனதும் - யாகசாலைவரை - திருபுடைதாள மன்னியில் மற்ற தாளங்களில் மல்லரிகள்.
* யாகசாலை தீபாராதனை நேரம் - ஒத்து, நாதசுரம், மிருதங்கம் மாத்திரம்.
* யாகசாலை முதல் கோபுரவாசல் வரை - திருபுடைதாள மல்லரி.
* கோபுரவாசல் முதல் தேரடிவரை - இதர மல்லரிகளும் வர்ணமும்.
* தேரடியிலிருந்து தெற்குரதவீதி பாதி வரை - ராகம்.
* தெற்குரதவீதி பாதி முதல் மேலரதவீதி பாதி வரை - ராகம், பல்லவி.
* மேலைரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை - கிர்த்தனைகள்.
* ஈசான்ய மூலை முதல் தேரடி வரை - தேவாரம், திருப்புகழ்.
* தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை - நட்டுமுட்டு, சின்னமேளம் ( அல்லது முகவீணை )
* கோயிலுக்குள் - துரிதகால திரிபுடைதாள மல்லரிகள்.
* தட்டு சுற்று நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* எதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது - எச்சரிக்கை.

விழாக்காலங்களில் கொடிஏற்றத்தினன்றும் கொடி இறக்கத்தினன்றும்
நவசந்திகளில் இசைக்க வேண்டிய பண் முறைகள்


* பிரம சந்தி - மத்தி - பைரவி.
* இந்தர சந்தி - கிழக்கு - குர்ஜரீ.
* அக்கினி சந்தி - தென்கிழக்கு - நாட்டை.
* இயம சந்தி - தெற்கு - தசாட்சரீ.
* நிருதி சந்தி - தென்மேற்கு - குண்டக்கிரிய.
* வருண சந்தி - மேற்கு - வராளி.
* வாயு சந்தி - வடமேற்கு - வேளாவளி.
* குபேர சந்தி - வடக்கு - ராமகலீ.
* ஈசான சந்தி - வட கிழக்கு - பிலகரி.



வைணவக்கோயில்களில் தேவாரம் திருப்புகழ் இவைகளுக்கு பதிலாக
அஷ்டபதி, திருப்பாவை முதலியன இசைக்கலாம்.


மேற்கண்ட விவரங்கள் யாவுய் அருள்மிகு சுவாமிநாதசுவாமி தேவஸ்தானம் - சுவாமிமலை தமிழ்நாடு
7.10.58 ல் வெளியிட்ட சிறு கைஏட்டு இதழில் கண்டது.
முன்னுரை குறிப்புகள்

1. மேற்படி தேவஸ்தானத்தினால் நாதசுர கலைப்பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டு நடைபெற்றது.
2. பள்ளியில் கற்பிக்கப்படும் கலைநுணுக்க விவரங்கள் மாணாக்கர் மட்டுமின்றி பயிற்சியாளர் போல் நாதசுர இசை சுவைஞரும், திருக்கோயில் தக்கார்களும் அறிந்து கொள்ள அல்லது சீர்மையடையச் செய்ய உதவுவதற்காக இக்சிறு கையேடு வெளியிடப்படுகிறது.
3. வெளியிட பணித்தவர் அந்நாள் தஞ்சை அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு. சக்கரை அவர்கள்.
4. இவை யாவும் கடை பிடிக்க வேண்டியவை என காட்டப்பட்வையே. அன்றியும் தனிக்கோயில்கள் தத்தம் நெடுநாளைய பழக்க வழக்கத்தில் நடைபெறுவனவற்றிற்கு சீர்மை பெற உதவுவதற்கும்.
5. விவரங்களை அளித்துதவியோர் திரு வீருசாமிப்பிள்ளை மற்றும் நாதசுரப்பள்ளி ஆசிரியர் திருப்பாம்புரம் திரு. சோமசுந்தரம் பிள்ளை.
6. அந்நாளைய திருக்கோயில் தக்கார் - இராமாஅமிர்த உடையார் ///// நிர்வாக அதிகாரி - வைத்திய நாதன்.

Courtesy: http://www.tamilheritage.org